ஆரோக்கியம் நிறைந்த நெல்லிக்காய் லட்டு: செய்வது எப்படி?
நெல்லிக்காயில் வைட்டமின் C, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உட்பட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
இவை ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் அதிக நன்மைகளை தருகின்றன.
நெல்லிக்காயை உணவில் சேர்த்து வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு மட்டுமின்றி நல்ல அடர்த்தியான கூந்தலையும் பெறலாம்.
இத்தனை மருத்துவகுணங்கள் நிறைந்த நெல்லிக்காயில் சுவையான லட்டு எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- நெல்லிக்காய்
- நாட்டு சக்கரை அல்லது வெல்லம்
- ஏலக்காய் பொடி
- நட்ஸ் வகைகள்
- நெய்
செய்முறை
முதலில் நெல்லிக்காயை கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு இட்லி பாத்திரம் அல்லது ஸ்டீமரின் உதவியுடன், நெல்லிக்காயை ஐந்து நிமிடங்களுக்கு ஆவியில் வேகவைத்து கொள்ளவும்.பின் நெல்லிக்காய்களை துருவி தனியாக எடுத்து வைக்கவும்.
இப்போது ஒரு அடி கனமான பாத்திரத்தில் நெல்லிக்காய் மற்றும் நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து நன்கு கலக்கவும்.
நெல்லிக்காய் மற்றும் சர்க்கரை ஒன்று சேர்ந்து திக்கான பதத்திற்கு வரும் வரை கைவிடாமல் கிளறவும்.
இதில் ஏலக்காய் பொடி, மற்றும் பொடியாக நறுக்கிய நட்ஸ் வகைகளை சேர்த்து கலந்து விடவும். கடாயில் ஒட்டாமல் வரும் பதத்தில் அடுப்பை அணைக்கவும். சிறிது நேரம் ஆற விடவும்.
கைகளில் சிறிதளவு நெய் தடவிக் கொண்டு சிறிய உருண்டைகளாக உருட்டவும். அவ்ளோதான் சுவையான நெல்லிக்காய் லட்டு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |