சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் சத்தான இட்லி.., எப்படி செய்வது?
பொதுவாக அனைவரின் வீட்டிலும் காலையிலும் மாலையிலும் விரும்பி சாப்பிடும் டிபன் இட்லி தான்.
எப்பொழுதும் போல இட்லிக்கு மாவு அரைக்காமல் இந்த சத்தான இட்லி செய்து சாப்பிடலாம்.
குறிப்பாக சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் இந்த சத்தான இட்லியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கருப்பு உளுந்து- 1 கப்
- பச்சைப்பயிறு- 1 கப்
- வெந்தயம்- 1 ஸ்பூன்
- வரகு அரிசி- 1 கப்
- உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் கருப்பு உளுந்தை நன்கு கழுவி 6 மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.
பின் இதேபோல் பச்சைப்பயிறை நன்கு கழுவி 6 மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.

இதனைத்தொடர்ந்து வரகு அரிசி மற்றும் வெந்தயத்தையும் கழுவி 6 மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து இவையனைத்தையும் தனி தனியாக நன்கு அரைத்து உப்பு சேர்த்து கலந்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
இறுதியாக இந்த மாவை இட்லி போல் சுட்டு எடுத்தால் சத்தான இட்லி தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |