உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க உதவும் முருங்கைக்கீரை இட்லி.., எப்படி செய்வது?
சத்தான ராகியில் கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் பல தாதுக்களும் நிறைந்துள்ளன.
அதேபோல், முருங்கைக்கீரை முடி வளர்ச்சியை அதிகரிக்க, நரைமுடி மறைய மற்றும் உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
ஆரோக்கியம் நிறைந்த இந்த முருங்கைக்கீரை ராகி ஆடையை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், சத்தான முருங்கைக்கீரை இட்லி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- முருங்கைக்கீரை- 2 கைப்பிடி
- சீரகம்- 1 ஸ்பூன்
- சின்ன வெங்காயம்- 5
- எண்ணெய்- 1 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- இட்லி மாவு- 3 கப்
செய்முறை
முதலில் ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின் அதில் கழுவி சுத்தம் செய்து வைத்த முருங்கைக்கீரையை சேர்த்து உப்பு சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து இதனை நன்கு ஆறவைத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்து இட்லி மாவில் சேர்த்து கலந்துகொள்ளவும்.
இறுதியாக மாவை இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேகவைத்து எடுத்தால் சத்தான முருங்கைக்கீரை இட்லி தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |