உடல் எலும்பு வலுப்பெற இந்த ஒரு லட்டு போதும்: எப்படி செய்வது?
மாறிவரும் காலகட்டத்தில் நாம் அனைவரும் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியமான ஒன்று.
அந்தவகையில், உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கம்பில் நிறைந்துள்ளது.
உடல் வலுவிற்கு சத்தான கம்பு லட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கம்பு- 1 கப்
- வேர்க்கடலை- ½ கப்
- ஏலக்காய்- 3
- வெல்லம்- ¾ கப்
- நெய்- 3 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு வாணலில் கம்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அதே வாணலில் வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் கம்பு சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் அதே மிக்ஸி ஜாரில் வேர்க்கடலை, ஏலக்காய், வெல்லம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
இதனைத்தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் அரைத்த கம்பு, வேர்க்கடலை, வெல்லம் இவற்றை சேர்த்து அதில் உருக்கிய நெய் சேர்த்து லட்டு பிடிக்கலாம்.
தினம் ஒரு லட்டு என சாப்பிட்டு வர உடல் எலும்புகள் வலுப்பெறவும், அனைத்து சத்துக்களும் கிடைக்க உதவுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |