தலைமுடி வளர்ச்சி மற்றும் எடை இழப்பிற்கு இந்த ஒரு லட்டு போதும்: எப்படி செய்வது?
பெரும்பாலான மக்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்சனை என்றாலே தலைமுடி மற்றொன்று உடல் எடை.
இந்த லட்டுவை தினம் ஒன்றாக சாப்பிட்டு வர உடல் எடை குறையவும், தலைமுடி பிரச்சனைக்கு நல்ல தீர்வாக அமையும்.
இந்த சுவையான மற்றும் ஆரோக்கியமான லட்டை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- எள்ளு- 1 கப்
- ஆளிவிதை- 1கப்
- பூசணி விதை- 1/4 கப்
- கசகசா- 1/4 கப்
- வெல்லம்- 1/2 கப்
- ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
- நெய்- 3 ஸ்பூன்
செய்முறை
ஒரு இரும்பு கடாயில் எள்ளை கழுவி வறுத்து நன்கு பொரிந்தவுடன் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அடுத்து அதே கடாயில் ஆளிவிதையை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின் பூசணி விதையை மற்றும் கசகசாவையும் தனித்தனியாக நன்கு வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதனை தொடர்ந்து ஒரு மிக்ஸியில் வறுத்து ஆறவைத்த எள்ளு, ஆளிவிதை, பூசணி விதை மற்றும் கசகசாவை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
பின் அதில் வெல்லம் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
இதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி நெய் சேர்த்து லட்டுவாக பிடித்து வைத்து தினமும் ஒன்றாக சாப்பிட்டு வரலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |