உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான கருப்பு எள்ளு லட்டு.., எப்படி செய்வது?
Black Sesame Laddu recipe- கருப்பு எள்ளில் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் ஆன்டிஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது.
இது எலும்பு மற்றும் நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது, முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது மற்றும் இதய நலனைப் பாதுகாக்க உதவுகிறது.
அந்தவகையில், உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான கருப்பு எள்ளு லட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கருப்பு எள்ளு- 1 கப்
- ஆளிவிதை- 1கப்
- பூசணி விதை- ¼ கப்
- கசகசா- ¼ கப்
- வெல்லம்- ½ கப்
- ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
- நெய்- 3 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு கடாயில் கருப்பு எள்ளை நன்கு கழுவி வறுத்து பொரிந்தவுடன் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அடுத்து அதே கடாயில் ஆளிவிதையை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின் பூசணி விதையை மற்றும் கசகசாவையும் தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதனை தொடர்ந்து ஒரு மிக்ஸியில் வறுத்து ஆறவைத்த எள்ளு, ஆளிவிதை, பூசணி விதை மற்றும் கசகசாவை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
பின் அதில் வெல்லம் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
இறுதியாக இதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி நெய் சேர்த்து லட்டுவாக பிடித்தால் சத்தான கருப்பு எள் லட்டு தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |