உடலிற்கு சத்தான கருப்பட்டி உளுந்து லட்டு.., எப்படி செய்வது?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உடல் வலுவிற்கு இந்த சத்தான லட்டை சாப்பிடலாம்.
அந்தவகையில், ஆரோக்கியம் நிறைந்த சத்தான கருப்பட்டி உளுந்து லட்டை இலகுவாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கருப்பு உளுந்து- 1 கப்
- வெள்ளை எள்- ½ கப்
- பாசிப்பருப்பு - ¼ கப்
- பச்சரிசி - ஒரு கைப்பிடி
- கருப்பட்டி- 1 கப்
- நெய் - 1 கப்
செய்முறை
முதலில் வாணலை அடுப்பில் வைத்து சூடானதும் கருப்பு உளுந்த சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
பின் அதில் வெள்ளை எள்ளை சேர்த்து மிதமான தீயில் வைத்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து பாசிப்பருப்பு மற்றும் பச்சரிசியை மிதமான தீயில் வைத்து தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

இதனை நன்கு ஆறவைத்து ஒரு மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு கருப்பட்டி மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.
அரைத்த கலவையை ஒரு பெரிய பாத்திரத்திற்கு மாற்றிய பின், கரைத்த கருப்பட்டி கலவையை இந்த மாவில் ஊற்றவேண்டும்.
இறுதியாக இவற்றில் நெய் சேர்த்து கலந்து சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து வைத்தால் சத்தான லட்டு ரெடி.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |