உடல் வலுவிற்கு சத்து நிறைந்த இந்த ஒரு லட்டு போதும்.., இலகுவாக எப்படி செய்வது?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உடல் வலுவிற்கு இந்த சத்தான லட்டை சாப்பிடலாம்.
இந்த லட்டை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உடலில் உள்ள கால்சியம் குறைபாட்டை சரி செய்ய உதவும்.
அந்தவகையில், ஆரோக்கியம் நிறைந்த சத்தான இந்த லட்டை இலகுவாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கருப்பு உளுந்து- 1 கப்
- வெள்ளை எள்- ½ கப்
- பாசிப்பருப்பு - ¼ கப்
- பச்சரிசி - ஒரு கைப்பிடி
- நாட்டு சர்க்கரை - 1 கப்
- நெய் - 100g
செய்முறை
முதலில் ஒரு கடாயில் கருப்பு உளுந்தப் பருப்பை மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
பின் அதே கடாயில் வெள்ளை எள்ளை சேர்த்து மிதமான தீயில் வைத்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
இதனை தொடர்ந்து பாசிப்பருப்பு மற்றும் பச்சரிசியை மிதமான தீயில் வைத்து தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து இதனை நன்கு ஆறவைத்து நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து பின்னதாக மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
இவற்றை ஒரு பெரிய பாத்திரத்திற்கு மாற்றிய பின்னதாக, நெய்யை காய்ச்சி இந்த மாவில் ஊற்றவேண்டும்.
இறுதியாக இவற்றை நன்கு கலந்து சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து வைத்தால் போதும் லட்டு ரெடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |