உடல் எடையை குறைக்கும் ஹெல்த்தியான பாயாசம்
சாலியா விதைகளை சாப்பிடுவதில் பல மருத்துவ நன்மைகள் உள்ளன.
இது இரத்த சோகையை குணப்படுத்தக்கூடியது மற்றும் இரும்புச் சத்து அதிகம் கொண்டுள்ளது.
இவை இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் உடலில் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த உதவுகிறது.
இதிலுள்ள நார்ச்சத்து காரணமாக இதனை உணவாக உட்கொள்ளும்போது நீண்ட நேரத்திற்கு பசிக்காது.
உடல் எடையை குறைப்பதற்கும் முடி உதிர்வை கட்டுப்படுத்துவதற்கும் சாலியா விதைகள் உதவும்.
மற்றும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்கவும் நோய் எதிரப்பு சக்தியை அதிகரிக்கவும் இது உதவுகிறது.
பாயாசத்திற்கு தேவையான பொருட்கள்
500 ml பால்-(திக்கான பால்)
சிறிதளவு குங்குமப்பூ
3 தே.கரண்டி ஊறவைத்த சாலியா விதைகள்-(½ கப் தண்ணீர் சேர்த்து)
பேரீச்சம்பழம்
பாயாசப்பொடி செய்ய தேவையான பொருட்கள்
1 கப் தாமரை விதைகள்
½ கப் வெட்டி வைத்த தேங்காய் சீவல்கள்
¼ கப் பாதாம் (விரும்பினால்)
¼ கப் முந்திரி
3 ஏலக்காய்
சிறிய துண்டு சுக்கு
பாயாசப்பொடி செய்முறை:
ஒரு கனமான பாத்திரத்தை சூடாக்கி ஒரு கப் தாமரை விதைகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.
குறைந்த தீயில் வைத்து வறுத்துக்கொள்ளுங்கள். பின் வெட்டி வைக்கப்பட்ட தேங்காய் சீவல்களை சேர்த்துக்கொள்ளுங்கள்.
பின் பாதாம் சேர்த்துக்கொள்ளுங்கள்.பின் முந்திரி சேர்த்துக்கொள்ளுங்கள்.
இவை அனைத்தும் சரியான பதத்தில் இருக்கிறதா என சோதிக்க தாமரை விதையை நசுக்கிப்பாருங்கள்.
மொறு மொறு என இருந்தால் அது சரியான பதத்தில் இருக்கிறது என அர்த்தம் அத்தோடு ஏலக்காய் சுக்கு போன்றவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்.
பவுடர் போல அரைத்துக்கொள்ளுங்கள் பின் சிறிது நேரம் குளிரவிடுங்கள். பின் இதனை மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளுங்கள்.
பாயாசம் செய்முறை
ஒரு கடாயில் சிறிதளவு நீர் சேர்த்துக்கொள்ளுங்கள். அத்தோடு பால் 500 ml சேர்த்துக்கொள்ளுங்கள்.
தேவையெனில் குங்குமப்பூ சேர்த்துக்கொள்ளுங்கள். பால் சேர்க்கும் முதல் சிறிது தண்ணீர் சேர்க்கும்போது பால் அடிப்பிடிக்காமல் இருக்கும்.
பால் நன்றாக கொதித்த பின் பாலோடு ஒரு இரவு முழுவதும் ஊறவைத்த சாலியா விதைகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.
இப்போது 10 நிமிடத்திற்கு குறைந்த ப்ளேமில் வைத்து இந்த விதைகளை சேருங்கள்.
திக்கான ஒரு பதம் வரும் வரை கிளறிவிடுங்கள்.பின் இந்த பாயாச பொடியை 3 மே.கரண்டி சேருங்கள் இதனை நன்றாக கலக்குங்கள்.
பேரீச்சம் பழத்தினை வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.பின் அதனை இக்கலவையோடு சேருங்கள். ஒரு 5 நிமிடங்கள் வரை கிளறி அடுப்பை அணைத்துவிட்டு அப்படியே விட்டு விடுங்கள்.
ஹெல்த்தியான சாலியா பாயாசம் தயார்!