சுவையான ராகி கேக்: செய்வது எப்படி?
ராகியில் கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் பல தாதுக்களும் நிறைந்துள்ளன.
இந்த ராகியில் குறைந்த அளவில் கொழுப்பு சத்து உள்ளது மற்றும் நிறைவுறா கொழுப்பான அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அதிக அளவில் உள்ளது.
இதனை உண்பதன் மூலம் உடலில் தேவை இல்லாத கொழுப்புகளை கரைத்து உடல் எடை கட்டுக்குள் இருக்க உதவும்.
இந்த ராகியை பயன்படுத்தி சுவையான மற்றும் ஆரோக்கியமான கேக் தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- ராகி மாவு- 100 கிராம்
- கிரீம்- 100 கிராம்
- பேக்கிங் பவுடர்- 1/4 டீஸ்பூன்
- கொக்கோ பவுடர்- ஒரு ஸ்பூன்
- சர்க்கரை- 100 கிராம்
- உப்பு - சிறிதளவு
- முட்டை- 2
- பால்- 20 மிலி
- வெண்ணிலா எசன்ஸ்- 2 சொட்டு
செய்முறை
முட்டை வெள்ளை கருவுடன் சர்க்கரை தூள் சேர்த்து நன்கு அடித்து, கலக்கி அதனுடன் பால், முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும்.
இதனுடன் ராகி மாவு, உப்பு, கோகோ பவுடர் சேர்த்து மறுபடியும் நன்றாக கலக்க வேண்டும்.
Yummy Tummy Aarthi
இந்த கலவையை கேக் மோல்டின் உள்ளே பட்டர் அல்லது நெய் தடவ வேண்டும்.
அதில் கேக் கலவையை ஊற்றி மைக்ரோவேவ் ஓவனில் 180 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 25 முதல் 30 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுத்து 10 நிமிடங்கள் வரை குளிர வைத்து பரிமாறினால் சுவையான ராகி கேக் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |