காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு Healthy Smoothie.., எப்படி தயாரிப்பது?
காலை உணவை தொடர்ச்சியாக தவிர்த்து வந்தால் அல்சர் மற்றும் வயிற்றுப் புண் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
காலை உணவை தவிர்ப்பவர்கள் இந்த பானத்தை தினமும் குடித்து வர உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்தும் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்
- பாதாம்- 10
- உலர் திராட்சை- 10
- அத்திப்பழம்- 3
- பிஸ்தா- 10
- வால்நட்- 5
- பூசணி விதை- 1 ஸ்பூன்
- சூரிகாந்தி விதை- 1 ஸ்பூன்
- தர்பூசணி விதை- 1 ஸ்பூன்
- முந்திரி- 5
- பேரிச்சம்பழம்- 5
- சியா விதை- 1 ஸ்பூன்
- வாழைப்பழம்- 1
- பட்டை- 1 துண்டு
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் பாதாம், உலர் திராட்சை, அத்திப்பழம், பிஸ்தா, வால்நட், பூசணி விதை, சூரியகாந்தி விதை, தர்பூசணி விதை, முந்திரி, பேரிச்சம்பழம் மற்றும் சியா விதை சேர்த்து ஒரு நாள் இரவு முழுக்க ஊறவைக்கவும்.
பின் மறுநாள் காலையில் ஊறவைத்த பொருட்களை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து இதில் பால் வேண்டுமானால் கஜலந்து குடிக்கலாம் அல்லது இதை அப்படியே குடிக்கலாம்.
தொடர்ச்சியாக காலை உணவை தவிர்ப்பவர்கள் இந்த பானத்தை தினமும் குடித்து வரலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |