உடலிற்கு வலு சேர்க்கும் சத்தான உளுந்து பால்- எப்படி செய்வது?
உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும்.
உளுந்தை பயன்படுத்தி ஆரோக்கியமான மற்றும் சுவையான உளுந்து பால் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- உளுந்து- ¼ கப்
- வெல்லம்- ¼ கப்
- ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
- சுக்கு தூள்- ½ ஸ்பூன்
- பால்- 1 கப்
செய்முறை
முதலில் ஒரு குக்கரில் உளுந்து சேர்த்து 2 முறை கழுவி தண்ணீர் சேர்த்து 4 விசில் வைத்து வேகவைத்து தண்ணீரை தனியாக எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் வேகவைத்த உளுந்தை அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து ஒரு பாத்திரத்தில் அரைத்து உளுந்து, வடிகட்டிய தண்ணீர் சேர்த்து கரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இறுதியாக இதனை அடுப்பில் வைத்து அதில் கரைத்த வெல்லம், ஏலக்காய் தூள், சுக்கு தூள் மற்றும் காய்ச்சி ஆறவைத்த பால் சேர்த்து கொதிக்கவைக்கவும்.
பின் இதில் வேண்டுமானால் நறுக்கிய பாதாம் சேர்த்தால் சுவையான உளுந்து பால் ரெடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |