மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கை அணியின் வெற்றியை பறித்த இருவர்
கிபெர்ஹாவில் நடந்த மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில் அவுஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
துடுப்பாட்டத்தில் தடுமாறிய இலங்கை
நேற்று நடந்த உலகக்கோப்பை 11வது போட்டியில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் மாதவி நல்ல தொடக்கம் அமைத்தார். கேப்டன் சமரி அதப்பத்து 16 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, 34 ஓட்டங்கள் எடுத்த மாதவி ஸ்டம்ப்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.
Harshitha Samarawickrama top scored with 34 runs.#LionessRoar #T20WorldCup #SLvAUS pic.twitter.com/pFyOhSXlxs
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) February 16, 2023
பின்னர் களமிறங்கிய ஒஷாதி ஓட்டங்கள் எடுக்காமல் வெளியேறினார். அணியின் ஸ்கோர் 94 ஆக இருந்தபோது விஷ்மி 24 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
ஸ்கூட் பந்துவீச்சில் வீராங்கனைகள் அடுத்தடுத்து வெளியேறியதால், இலங்கை 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 112 ஓட்டங்களே எடுத்தது. அவுஸ்திரேலிய தரப்பில் ஸ்கூட் 4 விக்கெட்டுகளும், கிரேஸ் ஹாரிஸ் 2 விக்கெட்டுக்களும் எடுத்தனர்.
Sri Lanka post 112 at the end of their 20 overs.#LionessRoar #SLvAUS #T20WorldCup pic.twitter.com/1Iwp5CVpkj
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) February 16, 2023
ஹீலே-மூனே கூட்டணி
பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில், தொடக்க வீராங்கனைகள் ஆட்டமிழக்காமல் 16வது ஓவரிலேயே வெற்றியை எட்டினர். விக்கெட் கீப்பர் அலிஸ்ஸா ஹீலே 54 ஓட்டங்களும், பெத் மூனே 56 ஓட்டங்களும் விளாசினர்.
@ICC
Australia won by 10 wickets! Beth Mooney 56*, Alyssa Healy 54*.#LionessRoar #T20WorldCup #SLvAUS pic.twitter.com/CsWQYqshov
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) February 16, 2023