”சகஜமாக ஓடி அவுட்டாகிவிட்டு அதிர்ஷ்டமில்லை எனச் சமாளிப்பதா?”பரீத் கவுரின் மீது ஆஸி வீராங்கனை விமர்சனம்
மகளிருக்கான 20 ஓவர் உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் சரியாக ஓடியிருந்தால் ரன் அவுட் ஆகியிருக்காது என அவுஸ்திரேலியா வீராங்கனை பரீத் கவுரின் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
அரையிறுதிப் போட்டி
இந்திய மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டியில், சிறப்பாக பேட்டிங் செய்து இந்திய அணியை வெற்றி ஈட்டும் நேரத்தில், ரன் அவுட் ஆனார் ஹர்மன் ப்ரீத் கவுர். தோல்விக்குப் பின்பாக பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர் துர்திருஷ்டவசாமாக நான் ரன் அவுட் ஆனதை எதிர்பார்க்கவில்லை என் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் ஆடவர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா,இங்கிலாந்துடன் இதே போல் ரன் அவுட் ஆனதை ஒப்பிட்டுக் கூறியிருந்தனர்.
ஹீலி விமர்சனம்
அவுஸ்திரேலிய அணி தென் ஆப்ரிக்காவிற்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது. அதன் பின் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அவுஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் ஹீலி
“அந்த ரன் அவுட் காமெடியாக இருந்தது, இவ்வளவு குறுகிய நேரத்தில் நான் ஸ்டம்பிங் செய்திருக்க மாட்டேன், சரி எதற்கும் முயன்று பார்ப்போம் என்று பார்த்தேன்.
கடைசியில் அது அவுட்டாக சென்றுவிட்டது, ஹர்மன்ப்ரீத் கவுர் துரதிர்ஷ்டவசமாக அவுட்டாகிவிட்டேன் எனக்கூறினார்.
ஆனால் அவர் கூறுவது சரியில்லை, வழக்கமாகச் செய்யும் முயற்சியைக் கூட ஹர்மன்ப்ரீத் செய்யவில்லை.
மிகவும் சகஜமாக அசால்ட்டாக ஓடினார், இதனால் வெறும் 2 மீட்டர் இடைவெளியில் அவுட்டாகிவிட்டார்” என ஹீலி பேட்டியில் தெரிவித்துள்ளார்.