கரூர் விவகாரத்தில் தவெக சார்பில் தொடரப்பட்ட மனு மீது இன்று விசாரணை
நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக வெற்றி கழகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று வரவிருக்கிறது.
இன்று விசாரணை
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேர் விவகாரத்தை விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதோடு, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு தலைமை பண்பு இல்லை என்று நீதிபதி கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்த நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக வெற்றி கழக சார்பில் வழக்கு போடப்பட்டுள்ளது.
அவர்கள் வழங்கிய மனுவில் கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு வழிவகுத்த காரணங்கள் மற்றும் சமூக விரோதிகளின் தொடர்பு குறித்து உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும் என்றும், விஜயின் தலைமை பண்பு குறித்த கருத்துக்களை நீக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கரூர் விவகாரத்தை பலரும் பேசி வரும் நிலையில் விஜய் கட்சி மனு மீது நடைபெறவுள்ள விசாரணையை தவெகவினர் எதிர்பார்க்கிறார்களாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |