இளைஞர்களை தாக்கும் ஹார்ட் அட்டாக்: இந்த 10 விஷயங்களில் கவனமாக இருங்கள்
சமீப காலங்களில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மாரடைப்பால் ஏற்படும் மரணம் அதிகரித்து வருகின்றன.
அதுவும் சிறிய வயதுடைய ஆண்கள் மற்றும் பெண்களுக்குத்தான் அதிகளவில் மாரடைப்பு ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக இளைஞர்களுக்கிடையில் மாரடைப்பு அதிகரித்து வருகின்றன.
University hospitals
வாழ்க்கை மற்றும் உணவுப் பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் சர்க்கரை நோய், உடல் பருமன் போன்றவை அதிகரித்து, இளைஞர்களிடையே மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
சிறுவயதில் மாரடைப்பு போன்ற நோய்களிடமிருந்து நம்மை காத்துக்கொள்ள 10 முக்கிய குறிப்புகள்.
10 முக்கிய குறிப்புகள்
எதை சாப்பிட்டாலும் உங்கள் கலோரியில் தனி கவனம் தேவை.
உடல் செயல்பாடுகள் அவசியம். சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை ஆபத்தானது.
பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள்.
உணவில் முழு தானியங்களை சேர்த்துக்கொள்ளுங்கள்.
புரத உணவுகளான கடல் உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
Non tropical திரவ எண்ணெயை பயன்படுத்தவும்.
பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்க்க வேண்டும்.
உணவில் செயற்கை சர்க்கரையை அகற்றவும்.
உப்பு சாப்பிடுவதை தவிர்க்கவும்.
மது அருந்துவதை தவிர்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |