இரவு தூங்காமல் மொபைல் பயன்படுத்தினால் Heart attack வருமா?
மனிதர்களுக்கு தூக்கம் என்பது மிகவும் இன்றியமையாதது. அந்த தூக்கத்தை நாம் சரியாக செய்யவில்லை என்றால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது பற்றி பார்க்கலாம்.
மொபைல் போன் பயன்படுத்தினால் ஏற்படும் பிரச்சனை
ஒரு நாளைக்கு மனிதர்கள் 6 முதல் 8 மணி நேரங்கள் தூங்க வேண்டும். ஆனால், இந்த காலத்தில் அப்படி யாரும் தூங்குவதில்லை. அதற்கு முக்கிய காரணம் என்னவென்று பார்த்தாலே ஸ்மார்ட் போன் தான் இருக்கிறது.
இரவு தூங்காமல் 10 மணிக்கு மேல் பயன்படுத்தும் மொபைல் போனிலிருந்து வரும் வெளிச்சத்தினால் மூளையில் மெலாட்டோனின் என்ற ஹார்மோன் சுரக்காமல் தூக்கமின்மை ஏற்படுகிறது.
நீங்கள் தூங்காமல் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால் அது மாரடைப்பு ஏற்படுவதற்கு காரணமாக அமைவது மட்டுமல்லாமல் நெஞ்செரிச்சலையும் ஏற்படுத்துகிறது.
குறிப்பாக இரவு நேரத்தில் தூங்காமல் பகல் நேரத்தில் அதிகமாக தூங்கினால் உங்களது உடல் அதனை ஏற்றுக்கொள்ளாது. இதனை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் புற்றுநோய் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது.
மேலும், உங்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து ஆயுட்காலம் குறைவதற்கும் வாய்ப்பு உள்ளது.
ஒருவேளை நீங்கள் மொபைல் போனை தூங்குவதற்கு முன்பு பயன்படுத்தினால் 10 நிமிடங்கள் மட்டும் பயன்படுத்துங்கள். அதுவும் 10 மீட்டர் இடைவெளிவிட்டு மொபைல் போனை வைத்து பாருங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |