மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு எச்சரிக்கும் 7 அறிகுறிகள்.., என்னென்ன தெரியுமா?
Heart Attack Warning Signs- மாரடைப்பு என்பது இதயத் தசைகளுக்குத் தேவையான இரத்தமும் ஆக்சிஜனும் சரியாகக் கிடைக்காமல், இரத்தக்குழாய் அடைப்பால் இதயத் திசுக்கள் சேதமடையும் அல்லது இறக்கும் ஒரு தீவிரமான மருத்துவ அவசர நிலையாகும்.
சமீப காலமாக இதய நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மரணமடைந்து வருகின்றனர்.
ஒவ்வொரு நாளும் இதய நோயால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதய நோய் என்பது ஒருசில தினசரி பழக்கங்கள் இதயத்தை மெதுவாக சேதப்படுத்தி, ஒருகட்டத்தில் இதய நோய்க்கு வழிவகுக்கும்.
அந்தவகையில், மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு எச்சரிக்கும் 7 அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

என்னென்ன தெரியுமா?
இளம் வயதிலேயே தலைமுடி நரைப்பது- இளம் வயதிலேயே தலைமுடி நரைப்பதற்கும் இதய இரத்த நாள பாதிப்புகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கம் போன்றவை இதற்கு காரணமாக இருக்கலாம்.
காதுக்குள் இதயத் துடிப்பு போன்ற சத்தம்- கேட்பது காதுக்கு அருகில் உள்ள இரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் மாறுவதால் இந்தப் பிரச்சனை ஏற்படலாம். உயர் ரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாள பாதிப்புகளும் இதற்குக் காரணமாக இருக்கலாம். குறிப்பாக ஒரு காதில் மட்டும் தொடர்ந்து இத்தகைய சத்தம் கேட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.
காது மடலில் சாய்வான கோடு- காது மடலில் சுமார் 45 டிகிரி கோணத்தில் ஆழமான மடிப்பு காணப்படுவது ஃபிராங்க்ஸ் சைன் எனப்படுகிறது. சில ஆய்வுகளில் இந்த மடிப்புக்கும் இதய இரத்த நாள பாதிப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
நடக்கும்போது கால் வலி ஏற்படுவது- சிறிது தூரம் நடந்தாலே கெண்டைக்காலில் வலி அல்லது இறுக்கம் ஏற்பட்டு, ஓய்வெடுத்ததும் வலி குறைந்தால் கவனிக்க வேண்டும். கால்களுக்குச் செல்லும் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால் இந்த பிரச்சனை உருவாகலாம்.
பெண்களுக்கு ஏற்படும் அசாதாரண சோர்வு- பெண்களுக்கு காரணமில்லாமல் அதிகப்படியான சோர்வு ஏற்படுவது கவனிக்க வேண்டிய அறிகுறியாகும். வழக்கமான வேலைகளைக்கூட செய்ய முடியாத அளவுக்கு சோர்வு, காலையில் எழுந்ததும் ஆற்றல் இல்லாமல் இருப்பது, ஓய்வெடுத்தாலும் சோர்வு குறையாமல் இருப்பது போன்றவை இதயப் பாதிப்புடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
கண் இமைகளில் மஞ்சள் நிறப் படிவுகள்- கண் இமைகளில், குறிப்பாக மூக்குக்கு அருகில் மஞ்சள் நிறத்தில் சிறிய படிவுகள் காணப்படலாம். கொலஸ்ட்ரால் படிவுகளால் இவை உருவாகலாம்.
ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு- ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை குறைபாடு சில நேரங்களில் இதய இரத்த நாள பாதிப்பின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். ஆணுறுப்புக்குச் செல்லும் இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பு, உடலின் மற்ற இரத்த நாளங்களிலும் பிரச்சனை இருப்பதை காட்டலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |