DJ இசையால் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து: மருத்துவரின் எச்சரிக்கை
அண்மைக்காலமாக மாரடைப்பு செய்தி நாம் அதிகமாக கேள்விப்பட்டு வருகிறோம்.
அதில் குறிப்பாக 25 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் தான் அதிகம் மாரடைப்பால் உயிரிழக்கின்றனர்.
மாரடைப்பு ஏற்படுவதற்கு அதிக காரணங்கள் இருந்தாலும் தற்போது அதில் DJ இசையும் சேர்ந்துள்ளது.
திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் இளைஞர்கள் DJ வில் நடனம் ஆடிக்கொண்டிருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கின்றனர்.
மருத்துவரின் எச்சரிக்கை
அளவுக்கு அதிகமான ஒலி மாசு மனிதனுக்கு நஞ்சு என்கிறாா்கள் மருத்துவா்கள்.
சமீபத்தில் ஏற்பட்ட இறப்பிற்கு டிஜே இசையே மாரடைப்புக்கு காரணமாக இருக்கலாம் என கூறுகின்றனர், இருதய நிபுணா்கள்.
70 டெசிபல் அளவு வரையிலான சத்தத்தை நமது காதுகள் தாங்கும் திறன் கொண்டவை. 80 முதல் 100 டெசிபல் வரையிலான ஒலியைத் தொடர்ந்து கேட்டால் காது கேளாமை பாதிப்பு ஏற்படும் என கூறும் மருத்துவர்கள.
Band barracks
100 முதல் 120 டெசிபல்களுக்கு இடைப்பட்ட ஒலி செவிப்பறை வெடிப்பு, தலை சுற்றலை ஏற்படுத்தும் என்றும் இந்த ஒலி இதயத்துடன் இணைக்கப்பட்ட செவிப்புலத்தைத் தூண்டும் எனவும் கூறுகின்றனா்.
அதனால் இதயத் துடிப்பு நின்று மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகின்றனா்.
ஒலி மாசு ஒரு நபரின் ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிக்கும் எனவும் உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் உள்ளிட்ட உடல் உபாதைகளை ஏற்படுத்தும் என்றும் கூறும் மருத்துவா்கள்.
உடல் ரீதியாக மட்டும் அல்லாமல் மன ரிதியிலான பாதிப்புகளையும் அது ஏற்படுத்தும் என்கிறாா்கள்.
ஆடல், பாடல், இசை என எதுவாக இருந்தாலும் அளவோடு இருக்கும் வரையில்தான் ஆரோக்கியத்திற்கு நல்லது என்கிறாா்கள் மருத்துவர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |