இதயநோய் வருவதை அரணமாக நின்று தடுக்கும் எளிய உணவுகள்! மாரடைப்பு பயம் இனி வேண்டாம்
இதயம் ஆரோக்கியமாக செயல்பட்டால் தான், உடலின் அனைத்து உறுப்புக்களும் சீராக செயல்பட முடியும். ஏனெனில் இதயம் உடலில் உள்ள ராஜ உறுப்பாகும்!
யார் ஒருவர் அளவுக்கு அதிகமான கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்கிறாரோ, அவர்கள் உடல் பருமனடைவதோடு, இதய நோயினாலும் பாதிக்கப்படக்கூடும்.
எனவே இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான சிறந்த வழிகளுள் முதன்மையானது ஆரோக்கியமான டயட்டை மேற்கொள்வது ஆகும்.
தற்போதைய காலக்கட்டத்தில் வயது வித்தியாசமின்றி இளம் வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படுகிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த சில உணவுகளை சாப்பிடலாம்.
சால்மன்
சால்மன் மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. ஒமேகா-3 இரத்தம் உறைவதைத் தடுத்து, சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கும். மேலும் இது இதய நோய்க்கு வழிவகுக்கும் ட்ரைக்ளிசரைடுகள் என்னும் ஒருவகை கெட்ட கொழுப்புக்களின் அளவைக் குறைக்கும்.
வால்நட்ஸ்
ஒவ்வொரு நாளும் ஒரு கையளவு வால்நட்ஸை சாப்பிட்டு வந்தால், இதய நோயின் அபாயத்தை பாதியாக குறைக்கலாம். வால்நட்ஸில் நல்ல கொழுப்புக்கள் ஏராளமான அளவில் உள்ளது.
ஆலிவ் ஆயில்
ஆரோக்கியமான எண்ணெயாக கருதப்படும் ஆலிவ் ஆயிலில் மற்ற உணவுப் பொருட்களை விட சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் குறைவான அளவிலேயே உள்ளது. விலங்கு பொருட்களில் இருந்து பெறப்படும் ட்ரான்ஸ் கொழுப்புக்கள், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து, தமனிச் சுவர்களில் கொழுப்புக்களை படியச் செய்து, இரத்த ஓட்டத்தில் தடையை உண்டாக்கும்.
டார்க் சாக்லேட்
கொக்கோ என்னும் தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படும் சாக்லேட்டில், ப்ளேலோனால்கள் அதிகம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இரத்தம் உறைவதைத் தடுக்கவும் செய்யும். மேலும் இது ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்று செயல்பட்டு, தமனிச் சுவர்களில் கெட்ட கொழுப்புக்கள் தேங்காமல், தமனியை சுத்தமாக வைத்திருக்கும்.
தக்காளி
தக்காளி கூட இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதில் உள்ள லைகோபைன், வைட்டமின் சி மற்றும் ஆல்பா மற்றும் பீட்டா கரோட்டீன், இதயத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு அவசியமான சத்துக்களாகும்.
மாதுளம் பழம்
மாதுளம் பழம் இதயத்துக்கு மிக நல்லது, அதை அடிக்கடி சாப்பிட இதயம் சீராக இயங்கும், மாரடைபு, நெஞ்சு வலி போன்ற பிரச்சனைகளில் இருந்து தப்ப முடியும்.