இந்த உணவுகளை சாப்பிட்டால் நெஞ்சு வலி, மாரடைப்புக்கு குட் பை சொல்லலாம்! இதயம் பலமாகும்
இதயம்! உடலில் உள்ள ராஜ உறுப்பாகும். இன்று பல்வேறு தரப்பினரும் தங்களின் இளம் வயதிலேயே இதயம் பாதிப்பிற்குள்ளாகி, உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.
இதயம் பாதிப்படைய முக்கிய காரணங்கள்
இதயம் பாதிப்படைவதற்கு முக்கிய காரணம் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு. இது ரத்தத்தில் அதிகமாகி இதயங்களுக்கு செல்லும் ரத்த நாளங்களில் ரத்த ஓட்டத்தை குறைத்து, விடுவதால் இருதய பாதிப்பு உண்டாகிறது. மேலும் அதிகம் கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்ணுதல், அதற்கேற்ற உடலுழைப்பில்லாமல் இருத்தல், மன அழுத்தம் ஆகியவை இதயம் பாதிப்படைய முக்கிய காரணங்கள் ஆகும்.
இதயம் பலம் பெற
வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்த அன்னாசி பழம் மற்றும் ஆரஞ்சு பழங்களை அவ்வப்போது உண்ண வேண்டும்.
இதயத்தை பலப்படுத்தி சீராக்கும் அத்திப்பழத்தை தொடர்ந்து உண்டு வர வேண்டும்.
பசும் பாலில் பூண்டு பற்கள் சிலவற்றை நசுக்கி போட்டு, நன்கு காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.
வெள்ளை தாமரை பூவின் இதழ்களை நசுக்கி, கஷாயம் செய்து காய்ச்சிய பசும்பாலில் அக்கஷாயத்தை கலந்து குடிக்க வேண்டும்.
மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் பலமாகும்.