இதய பாதிப்பை எச்சரிக்கும் 5 முக்கிய அறிகுறிகள்.., என்னென்ன தெரியுமா?
சமீப காலமாக இதய நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மரணமடைந்து வருகின்றனர்.
ஒவ்வொரு நாளும் இதய நோயால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதய நோய் என்பது ஒருசில தினசரி பழக்கங்கள் இதயத்தை மெதுவாக சேதப்படுத்தி, ஒருகட்டத்தில் இதய நோய்க்கு வழிவகுக்கும்.
அந்தவகையில், இதய பாதிப்பை எச்சரிக்கும் முக்கிய அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

என்னென்ன அறிகுறிகள்?
ஓய்வுக்கு பின் சோர்வு- ஓய்வெடுத்த பிறகும் தொடர்ந்து சோர்வாக இருப்பது ஒரு முக்கிய அறிகுறி. இதயம் சரியாக வேலை செய்யாமல் இருந்தால், உடலுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் சோர்வு ஏற்படும்.
மூச்சுத்திணறல்- மூச்சுத்திணறல் கூட கவனிக்க வேண்டிய அறிகுறி. இதயம் பலவீனமாயிருந்தால், இரத்தம் நுரையீரலில் தேங்கி மூச்சு விட சிரமமாகும்.
திடீர் தலைச்சுற்றல், குமட்டல் அல்லது வயிறு உப்புசம்- இது போன்றவை சில நேரங்களில் சைலன்ட் ஹார்ட் அட்டாக் அறிகுறிகளாக இருக்கலாம். பலர் இதை சாதாரண பிரச்சனை என்று தவறாக நினைத்து விடுகின்றனர்.
தூக்கமின்மை- தூங்க முடியாமை அல்லது திடீர் பதற்றம் கூட இதய பிரச்சனைக்கு காரணமாக இருக்கலாம்.
மார்பில் வலி- மார்பில் வலி அல்லது அசௌகரியம் மிகவும் முக்கியமான அறிகுறி. இதை எளிதாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |