இலங்கையில் அதிகரிக்கும் வெப்பநிலை: பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கையில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக பாடசாலைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளுக்கு எச்சரிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வெப்பநிலை நிலவுவதால் பாடசாலைகளில் வெளிப்புற செயல்பாடுகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை தவிர்க்குமாறும் இலங்கை சுகாதார அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது.
இந்த அறிவிப்புகளை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர். முரளீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

அறிவுரைகளை பின்பற்றாத பாடசாலைகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மட்டகளப்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முரளீஸ்வரன், பெற்றோர் தமது பிள்ளைகளை வெயிலில் அலைய விடாமல், உடல் இயக்கச் செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டாமையும், அவர்களுக்கு தேவையான நீர், ஓய்வு ஆகியவற்றை சரியாக வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் மாணவர்கள் அதிக தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஓய்வாகவும் நிதானமாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
அதே சமயம் சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் என பொதுமக்கள் அனைவரும் வெப்பநிலையில் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த வெப்ப காலத்தை அபாயகரமான சூழ்நிலை எனக் கருதி, வெளியில் செல்வதை தவிர்க்கவும், தேவையான நீர் ஆகாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் ஆர். முரளீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |