வங்கதேச வீரரின் விக்கெட்டை தட்டி தூக்கிய இலங்கை வீரர் குமார! களத்தில் வார்த்தை மோதலால் பரபரப்பு... வெளியான வீடியோ
உலகக்கோப்பை டி20 தொடரில் இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்து வருகிறது.
தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி, மக்முதுல்லா தலைமையிலான வங்கதேசத்துடன் மோதும் நிலையில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
தற்போதைய நிலவரப்படி வங்கதேச அணி 14.3 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் முகமது நையிம் 55 ரன்களுடன் விளையாடி வருகிறார்.
Feel the heat of #ICCT20WorldCup2021 some harsh words exchanged between Liton Das & Lahiru Kumara after Das was caught at mid-off in #SlvsBan. Upcoming #PakvsIndia pic.twitter.com/eUbVfm5q3Z
— Haroon Janjua (@JanjuaHaroon) October 24, 2021
முன்னதாக இலங்கை பந்துவீச்சாளர் லஹிரு குமார பந்துவீச்சில் வங்கதேச பேட்ஸ்மேன் டிடன் தாஸ், ஷனகாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
இதன்பின்னர் களத்தில் குமார, தாஸ் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவியது,
பின்னர் பீல்டிங்கில் இருந்த மற்ற இலங்கை வீரர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி பிரித்துவிட்டனர்.