முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோயால் மரணமா? வைரலாக பரவிய செய்திக்கு வெளியான உண்மை
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் தனது 49வது வயதில் காலமானார் என்று பரவிய செய்தி போலியானது என தெரியவந்துள்ளது.
ஹீத் ஸ்ட்ரீக் மரணம் குறித்து பரவிய தகவல்
அவர் முறைந்ததாக காலையில் தகவல் வெளியான நிலையில், தான் இறக்கவில்லை என்று ஒலங்காவிடம் ஹீத் உரையாடிய Whatsapp செய்தி வெளியாகியுள்ளது.
திடீரென இன்று காலை, புற்றுநோயால் உயிரிழந்ததாக தகவல் வெளியானதும், ஜிம்பாப்வே கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி, உலக கிரிக்கெட் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது எனலாம். இதற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், அவர் உயிரோடு இருப்பதாக ஓய்வு பெற்ற ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் ஹென்ரி ஒலங்கா கூறியுள்ளார்.
I can confirm that rumours of the demise of Heath Streak have been greatly exaggerated. I just heard from him. The third umpire has called him back. He is very much alive folks. pic.twitter.com/LQs6bcjWSB
— Henry Olonga (@henryolonga) August 23, 2023
அவரும் தனது சமூக ஊடகங்களில் தனது இரங்கலை தெரிவித்திருந்தார், பின்னர் நேரடியாக ஸ்ட்ரீக்கிடம் சாட் செய்த ஒலங்காவிற்கு, அவரிடம் இருந்து ரிப்ளை வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
மேலும் இவர் உயிருடன் இருப்பதை உறுதி செய்து, முந்தைய ட்விட்டை அழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |