ஹீத்ரோ விமான நிலைய விரிவாக்கம்: பல பில்லியன் பவுண்டுகள் முதலீடு!
ஹீத்ரோ விமான நிலையம் தனது இரண்டு முனையங்களை மேம்படுத்துவதற்காக பல பில்லியன் பவுண்டுகள் முதலீடு செய்ய தயாராகி வருகிறது.
ஹீத்ரோ விமான நிலையம் மேம்பாட்டு பணி
பிரித்தானியாவின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான ஹீத்ரோ விமான நிலையம்(Heathrow Airport) தனது இரண்டு முனையங்களை மேம்படுத்துவதற்கு தயாராகி வருகிறது.
இதற்காக பல பில்லியன் பவுண்டுகள் முதலீடு செய்யவும் தயாராகி வருகிறது.
Arriving this morning is @British_Airways second heritage livery - A319 G-EUPJ painted in BEA colours to celebrate BA’s centenary year. We’re happy to welcome her home to Heathrow! #BA100 pic.twitter.com/aeaXaXpeNu
— Heathrow Airport (@HeathrowAirport) March 4, 2019
இந்த முதலீடு, இரண்டு மற்றும் ஐந்து முனையங்களின் கொள்ளளவை அதிகரித்தல், விமான நிலையத்தின் தளவமைப்பை மறுசீரமைத்தல் மற்றும் பேருந்து இணைப்புகள் உட்பட தரைவழிப் போக்குவரத்து இணைப்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என்று தெரியவந்துள்ளது.
இந்த திட்டம் தனியார் முதலீட்டின் மூலம் நிதியளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
3வது ஓடுபாதை
ஹீத்ரோவில் மூன்றாவது ஓடுபாதைக்கு Chancellor Rachel Reeves சமீபத்தில் ஆதரவு அளித்ததை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இந்த விரிவாக்கம் இங்கிலாந்து பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான அரசாங்க மூலோபாயத்தின் முக்கிய அங்கமாக இருப்பதாக Rachel Reeves குறிப்பிட்டார்.
மூன்றாவது ஓடுபாதை திட்டத்தின் விவரக்குறிப்புகள் இன்னும் உருவாக்கத்தில் இருந்தாலும், முந்தைய ஹீத்ரோ கட்டுமானத் திட்டங்களின் அளவு சில நுண்ணறிவுகளை வழங்குகிறது.
மூன்றாவது ஓடுபாதைக்கான Chancellor Rachel Reeves-ன் ஆதரவு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அவரது சொந்தக் கட்சியின் உறுப்பினர்களிடமிருந்து விமர்சனத்தை ஈர்த்துள்ளது.
அவர்கள் திட்டத்தின் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து கவலைகளை எழுப்புயுள்ளனர்.
ஹீத்ரோவின் விரிவாக்கம் "மிகவும் அவசியம்" என்றும், 100,000 வேலைகளை உருவாக்க வாய்ப்புள்ளது என்றும் Chancellor Rachel Reeves கருத்து தெரிவித்துள்ளார்.
ள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |