ஹீத்ரோ விமான நிலையத்தில் வெள்ளப்பெருக்கு: பயணிகளுக்கு விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை
வெள்ளப்பெருக்கு காரணமாக ஹீத்ரோ விமான நிலையத்தின் 2 மற்றும் 3 வது முனையங்களுக்கான வழித்தடங்களில் தீவிரமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த முனையங்களுக்கு சாலை வழியாக செல்லும் அனைத்து பாதைகளும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் பயணிகள் சாலை போக்குவரத்தை தவிர்த்து விட்டு ரயில் மற்றும் நிலத்தடி சுரங்க போக்குவரத்தை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இந்த தற்காலிக மாற்றத்துக்கு ஏற்றவாறு 2 வது மற்றும் 3 வது முனையங்களுக்கு செல்பவர்கள் அதற்கு ஏற்றவாறு பயண திட்டங்களை வடிவமைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் பொதுப் போக்குவரத்து மூலமாக முனையங்களுக்கு வருபவர்கள் அதற்கான கூடுதல் நேரத்தை ஒதுக்கி கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |