ஹீத்ரோ விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட பெண்மணி... பெட்டிக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொருள்
லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் சூட்கேஸில் பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் 800,000 பவுண்டுகள் மதிப்புள்ள போதைப் பொருளுடன் பெண்மணி ஒருவர் சிக்கியுள்ளார்.
எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள்
ஹீத்ரோ விமான நிலையத்தின் ஊடாக பிரித்தானியாவிற்கு தொழில்முறை அளவு கொக்கைன் கடத்தியதாக குறித்த பெண்மணி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
@getty
பில்ஸ்டன் பகுதியில் வசிக்கும் 58 வயது Azra Williams என்பவரையே, பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை முன்னெடுத்தனர்.
அதில் 10 கிலோ அளவுக்கு கொக்கைன் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். அதன் மதிப்பு சுமார் 800,000 பவுண்டுகள் வரையில் இருக்கலாம் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐல்வொர்த் கிரவுன் நீதிமன்றத்தில்
இதனையடுத்து முதல் தர போதை மருந்தை கடத்தியதாக குறிப்பிட்டு அவர் மீது வழக்கு பதியப்பட்டது. இந்த நிலையில், வில்லியம்ஸ் உக்ஸ்பிரிட்ஜ் மாஜிஸ்திரேட் முன் ஆஜரானார், அங்கு அவர் காவலில் வைக்கப்பட்டார், தொடர்ந்து ஜனவரி 25ல் ஐல்வொர்த் கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
@getty
அவர் கடந்த சனிக்கிழமை ஜமைக்காவின் Montego Bay பகுதியில் இருந்து லண்டன் திரும்பியதாகவே கூறப்படுகிறது. மேலும், இவரது பின்னணி தொடர்பிலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |