பறக்கும் விமானத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞர்... ரயில் தண்டவாளத்தில் சடலம்: லண்டனில் சம்பவம்
லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் நோக்கி சென்ற விமானத்தில் இருந்து தவறி விழுந்து, ரிச்மண்ட் பகுதி ரயில் தண்டவாளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞரின் அடையாளம் இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
விமானத்தில் இருந்து தவறி
கடந்த 2020 டிசம்பர் 14ம் திகதி பொதுமக்களில் ஒருவர் குறித்த இளைஞரின் சடலத்தை முதலில் பார்த்துள்ளார். சுமார் 15 முதல் 18 வயதிருக்கும் என பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.
பறக்கும் விமானத்தில் இருந்து தவறி விழுந்துள்ளதால், தலை, கழுத்து, மார்பு மற்றும் கால்களில் படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக மரணம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.
முதற்கட்ட விசாரணைக்கு பின்னர், தொடர்புடைய இளைஞரின் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முயன்றும் பயனில்லை என்றே பொலிசார் தெரிவித்துள்ளனர். பகல் 10 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், பொதுமக்களில் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் அவசர மருத்துவ உதவிக்குழுவினர் சம்பவயிடத்திற்கு விரைந்தனர்.
Image: BTP
ஆனால், குறித்த இளைஞர் ஏற்கனவே இறந்துள்ளதாக அவர்கள் உறுதி செய்துள்ளனர். அந்த இளைஞரின் உடலில் ஆவணங்கள் அல்லது அடையாளங்கள் எதுவும் இருக்கல்லை, பச்சை குத்தப்பட்ட அல்லது தழும்புகள் போன்ற காணக்கூடிய அம்சங்கள் எதுவும் இருந்திருக்கல்லை, மேலும் அவர் தனது காலணிகள் மற்றும் காலுறைகளை தொலைத்திருந்துள்ளார் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
அவர் நைஜீரிய இளைஞர்
கொலை செய்யப்பட்டதற்கான எந்த அடையாளங்களும் காணப்படவில்லை, ஆனால் ரயில் தண்டவாளத்தில் விழுந்ததால் ஏற்பட்ட காயங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அதிக உயரத்தில் பல மணி நேரம் பயணம் செய்து, அங்கிருந்து பூமியில் விழுவதால் ஏற்படும் உடல் மாற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், ரயில் இருந்து தவறி விழுந்ததற்கான வாய்ப்பும் இல்லை என்பது கண்காணிப்பு கமெரா பதிவுகளில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் அணிந்திருந்த சட்டையில் இருந்து, அவர் நைஜீரிய இளைஞர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Image: MyLondon/BPM
இந்த நிலையில், சடலம் மீட்கப்பட்டதற்கும் 6 மணி நேரம் முன்பு லாகோஸிலிருந்து ஒரு விமானம் ஹீத்ரோவுக்கு சென்றுள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டது. மேலும், சடலம் மீட்கப்பட்ட பகுதியில் வைத்து தான், விமானம் தரையிறங்கும் முன்னர் விமானிகள் சக்கரங்களை விடுவிப்பார்கள் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும், விமான சக்கரத்தில் பூட் காலால் மிதிக்கப்பட்டிருந்ததும் அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், இதுவரை அந்த இளைஞர் தொடர்பில் இதுவரை உறவினர்கள் எவரும் உரிமை கோரவில்லை என்பதுடன், நைஜீரியாவிலும், தொடர்புடைய இளைஞரை அடையாளம் காண முடியவில்லை என்றே கூறப்படுகிறது.