வெப்பம் தொடர்பில் பிரான்ஸ் அரசியலில் எழுந்துள்ள சர்ச்சை
ஐரோப்பிய நாடுகள் பல வெப்ப அலையால் அவதியுற்றுவரும் நிலையில், பிரான்ஸ் அரசியலில் வெப்பம் தொடர்பில் ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது.
பிரான்ஸ் அரசியலில் எழுந்துள்ள சர்ச்சை
2027ஆம் ஆண்டு பிரான்சில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வலதுசாரிக் கட்சித் தலைவரான மரைன் லெ பென், தான் ஜனாதிபதியானால், நாட்டு மக்களை வெப்பத்திலிருந்து பாடுகாக்க ஏர் கண்டிஷன் தொடர்பில் ஒரு பெரிய திட்டத்தை அறிமுகம் செய்வதாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பேசிய லெ பென், ஏர் கண்டிஷனிங் உயிர்களைக் காப்பாற்றும் என்றும், உலகம் முழுவதும் பல நாடுகளில் பொதுக் கட்டிடங்களில் உள்ளதுபோல பிரான்சில் பொதுக் கட்டிடங்களில் ஏர் கண்டிஷனர் இல்லாததால், ஊழியர்கள் சரியாக வேலை செய்ய முடியாததால், பிரச்சினை நிலவுகிறது என்று கூறினார்.
ஆனால், வெப்பத்தைக் கட்டுப்படுத்த எல்லா இடங்களிலும் ஏர் கண்டிஷனர் பயன்படுத்தச் சொல்வது தவறான முடிவு என்கிறது கிரீன்ஸ் கட்சி.
[NYWEW6D]
நாட்டில் பசுமையான இடங்களை அதிகரிப்பதன் மூலமும், வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் வகையில் கட்டிடங்களை அமைப்பதன் மூலமும்தான் வெப்பத்தைக் கட்டுப்படுத்தவேண்டுமேயொழிய ஏர் கண்டிஷனர் பயன்படுத்தச் சொல்வது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்கிறார் கிரீன்ஸ் கட்சி தலைவரான மரைன் டாண்டெலியர்.
ஆக, வெப்பத்தால் பிரான்ஸ் அரசியலும் சூடு பிடித்துவருகிறது எனலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |