மகிந்த மறைந்திருக்கும் கடற்படை முகாம் மதில் மீது கனரக இயந்திர துப்பாக்கி பொருத்தம்!
மகிந்த ராஜபக்ச குடும்பத்துடன் மறைந்திருக்கும் திருகோணமலை கடற்படை முகாம் மதில் மீது கனரக இயந்திர துப்பாக்கி பொருத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பில் நேற்று வன்முறை வெடித்ததை அடுத்து இலங்கையில் பல்வேறு இடங்களில் மகிந்த குடும்ப வீடு உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அரசியல்வாதிகள் பலரின் வீடுகள் மற்றும் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இதனையடுத்து, இன்று காலை முன்னாள் பிரதமர் மகிந்த குடும்பத்துடன் ஹெலிகாப்டர் மூலம் திருகோணமலையில் உள்ள கடற்படை முகாமிற்கு தப்பிச்சென்றதாக செய்திகள் வெளியானது.
இதைத்தொடர்ந்து திருகோணமலை கடற்படை முகாம் முன் குவிந்த பொதுமக்கள், சுமார் 4 மணிநேரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மகிந்த ராஜபக்ச குடும்பத்துடன் மறைந்திருக்கும் கடற்படை முகாம் முன் குவிந்த மக்கள்!
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கடற்படை முகாம் மதில் மீது இரண்டு கனரக இயந்திர துப்பாக்கி பொருத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Protest is underway More than 4 Hours in front of #Trincomalee Navy Base.. But Now Machine gun fixed on Navy Base wall#LKA #SriLanka #SLnews #EconomicCrisisLK #SriLankaProtests #SrilankanCrisis #ProtestLK #MahindaRajapaksa pic.twitter.com/q1y0k9MXvd
— ????? ™️ (@yugan___) May 10, 2022
ஊழல் ஆட்சியாளர்களை பாதுகாக்கும் இலங்கை கடற்படை, அரசாங்கத்திற்கு எதிராக அமைதியாக போராடுபவர்களை அச்சுறுத்தும் வகையில் கனரக இயந்திர துப்பாக்கியை பொருத்தியுள்ளதற்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.