அதிகரிக்கும் போர் பதற்றம்.., சென்னையில் உள்ள மால்களுக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையைத் மேற்கொண்டது.
பாகிஸ்தான் ஏவுகணைகளை ஏவி இந்தியாவைத் தாக்கும் முயற்சிகளை இந்திய ஆயுதப் படைகள் வெற்றிகரமாக முறியடித்தன.
மேலும், இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருவதால் எல்லையில் உள்ள மாநிலங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு, ஐ.பி.எல்.போட்டி நடத்தினால் குண்டு வெடிக்கப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், போர் பதற்றம் நிலவுவதால் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் உள்ள ஸ்பென்சர் பிளாசா, எக்ஸ்பிரஸ் அவென்யூ, வி.ஆர். மால், விஜயா மால் உள்ளிட்ட இடங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வணிக வளாகத்திற்கும் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் காவல்துறை பாதுகாப்பு அளித்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |