தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.., எங்கெல்லாம் தெரியுமா?
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
கிழக்கு விதர்பா முதல் தமிழ்நாடு பகுதிகள் வரை தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஒரு வாரத்திற்கு மிதமான மழை தொடரும்.
குறிப்பாக, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும்.
அதேபோல, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும்.
மேலும், சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஓரிரு பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |