வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை.., எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்?
தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வானிலை மையம் தகவல்..,
கடலோர கர்நாடகம் மற்றும் கடலோர ஆந்திரம் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதனால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம் மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மேலும், நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |