தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- சென்னை வானிலை மையம்
தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
மத்தியபிரதேசத்திலிருந்து தமிழ்நாடு வழியாக மன்னார் வளைகுடா வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் காற்றுடன் கனமழை பெய்யும்.
நாளை நீலகிரி, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை மலைப்பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

மே 7ஆம் திகதி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
மே 8 மற்றும் 9ஆம் திகதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40km வேக காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.