தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
தெலங்கானா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களின் மலைப் பகுதிகள், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்.
நாளை மறுநாள் நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை அதிகபட்சமாக இன்று 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |