உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
தெற்கு குஜராத்தில் இருந்து கர்நாடகா வரை காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மாவட்டங்களளில் இன்று கனமழை பெய்யக்கூடும்.
அதேபோல் கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்யக்கூடும்.

ஜூன் 5 மற்றும் 6ஆம் திகதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், ஏனைய தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், இரவில் நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழையும் பெய்யும்.
அதேநேரம் சென்னையில் வெயிலின் தாக்கம் 98°F கீழ் குறையும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |