காற்றழுத்த தாழ்வு பாதை.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்?
தமிழகத்தில் வருகின்ற ஜூலை 11ஆம் திகதி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
தெற்கு குஜராத்திலிருந்து கேரளம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல், ஜூலை 11ஆம் திகதி வரை தமிழ்நாட்டில் பரவலாக மிதமான மழை பெய்யும்.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதனிடையே ஓடிசா-மேற்கு வங்காள கடலோர பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
அது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஒடிசா கடலோரத்தில் சந்த்பாலி மற்றும் பாலசோர்க்கு அருகில் உள்ள திகாவிர்க்கு இடையே கரையை கடக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |