நிலவும் வளிமண்டல சுழற்சிகள்.., தமிழகத்தில் வெளுக்கப்போகும் கனமழை: எங்கெல்லாம் தெரியுமா?
தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
சுமார் 3.1 கிமீ முதல் 4.5 கிமீ உயரம் வரை தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
அதேபோல் சுமார் 1.5 கிமீ உயரம் வரை தெற்கு கடலோர ஆந்திர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
மேலும் சுமார் 1.5 கிமீ உயரம் வரை தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை, ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இந்நிலையில், இதனால் இன்று திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். இதனால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடப்படுகிறது.

அதேபோல் திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர், அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரம் அதாவது இன்று இரவு 7 மணி வரை செங்கல்பட்டு, தர்மபுரி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது.
அதேபோல் அரியலூர், சென்னை, கோவை, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், மதுரை, நாமக்கல், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், தேனி, நீலகிரி, திருச்சிராப்பள்ளி மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |