கன மழை, பெருவெள்ளம்... லண்டன் மக்களுக்கு விடுக்கப்பட்ட மஞ்சள் எச்சரிக்கை
லண்டனில் இன்று பிற்பகல் பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறி வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நள்ளிரவு 3 மணி வரையில்
சுமார் 15 மணி நேரம் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ள லண்டன் வானிலை ஆய்வு மையம், இங்கிலாந்தின் தெற்கில் வசிக்கும் மக்கள் பலத்த மழையை எதிர்கொள்வார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.
?️ More heavy rain is expected this evening ?️
— London Fire Brigade (@LondonFire) January 4, 2024
Parts of #London may experience flash floods as a result so make sure you know what to do in an emergency.
You can sign up to free flood warnings that are delivered by phone, email or text. Find out more ? https://t.co/MUAzVAVPIA pic.twitter.com/uv7dWi0yIF
நண்பகல் 12 மணி முதல் நள்ளிரவு 3 மணி வரையில் இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். லண்டனுக்கான வானிலை எச்சரிக்கை முன்னறிவிப்பின்படி, மழை நண்பகலில் தொடங்கும் என்றும், இரவு முழுவதும் நீடித்து வெள்ளிக்கிழமை காலை 5 மணி வரை தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், ஹென்க் புயல் கடும் சேதத்தை ஏற்படுத்திய சில நாட்களுக்குப் பிறகு கன மழை தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, லண்டனில் திடீரென்று பெருவெள்ளத்திற்கு வாய்ப்பிருப்பதாகவும் கவலை எழுந்துள்ளது.
@getty
அவசரகாலத்தில் என்ன செய்ய வேண்டும்
இதனையடுத்து லண்டன் தீயணைப்பு வீரர்கள் குழு சமூக ஊடகத்தில் செய்துள்ள பதிவில், இன்று மாலை பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக லண்டனின் சில பகுதிகள் திடீர் வெள்ளத்தை சந்திக்க நேரிடலாம்,
Credit: Bav Media
எனவே அவசரகாலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், உதவி தேவைப்படும் என்பதால், மக்கள் முக்கியமான தொடர்பு இலக்கங்களை தங்கள் அலைபேசியில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும்
அத்துடன் வெள்ள அபாயம் தொடர்பான இலக்கங்களையும் பதிவு செய்துகொள்ள கேட்டுக்கொண்டுள்ளனர். உங்கள் தெருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், உடனடியாக எரிவாயு மற்றும் குடிநீர் விநியோகங்களை முடக்குங்கள் என்றும் முடிந்தால் மின் விநியோகத்தையும் அணைத்துவிட கேட்டுக்கொண்டுள்ளனர்.
Credit: Splash
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |