தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்- வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஒரு வாரத்திற்கு மழை தொடரும்.

குறிப்பாக, இன்று திருச்சி, நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கரூர், சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை, இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
மேலும், அதிகபட்ச வெப்பநிலை 106 டிகிரி ஃபாரன்ஹீட் வரை பதிவாக வாய்ப்புள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |