வங்கக்கடலில் உருவான புயல் சின்னம்.., அடுத்த 3 மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில் கனமழை
அடுத்த 3 மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
16 மாவட்டங்களில் கனமழை
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதாவது புயல் சின்னம் இன்று காலை 9 மணி நிலவரப்படி, நாகைக்கு தென்கிழக்கே 630km தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இதன் காரணமாக டெல்டா மற்றும் சென்னை புறநகர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், அடுத்த 3 நேரத்திற்கு 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 26, 2024
அதன்படி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகபட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமாரி, தென்காசி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், புதுசேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |