தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.., எங்கெல்லாம் தெரியுமா?
தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
கேரள பகுதிகளில் தென்மேற்கு பருவமழை நாளை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யுக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கோவை, நீலகிரி, தேனி, திருப்பூர், நெல்லை, தென்காசி, திண்டுக்கல், கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 16 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மேலும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |