தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு: எந்தெந்த மாவட்டங்கள்?
தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்பு என தகவல் வந்துள்ளது.
17 மாவட்டங்களில் மழை
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
திருவள்ளுர், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திண்டுக்கல், திருவாரூர், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கும், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கும் வாய்ப்புள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |