தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.., எங்கெல்லாம் தெரியுமா?
தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சியும், கேரளம் மற்றும் தென்கிழக்கு பகுதிகள் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதையும் நிலவுகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அதோடு, ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கரூர் மற்றும் மதுரை மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், மணிக்கு 40 முதல் 50km வரையிலான வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |