தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகரும்.
இது, வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் படிப்படியாக வலுகுறையக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இவற்றுடன், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் இருந்து தென் தமிழ்நாடு வரை வளி மண்டல சுழற்சி ஒன்று நிலவுவதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 96.8 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |