தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு வாரத்திற்கு மழை தொடரும்.
குறிப்பாக கோவை, நெல்லை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் மற்றும் நீலகிரி, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும்.
அதேபோல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |