தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
நேற்று முன்தினம் காலை மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவியது.
பின் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, இரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.
இது நேற்று காலை மேலும் வலுப்பெற்று, வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.
இது மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோரப் பகுதிகளில், கோபல்பூர் மற்றும் பாராதீப்பிற்கு இடையே இன்று இரவு கரையை கடக்கக்கூடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இதனால் இன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல் நாளை திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை, வேலூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |