தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.., வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் கிழக்கு திசை வளிமண்டல அலை நிலவுவதால், 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாயுப்புள்ளது.
குறிப்பாக, இன்று செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.

மேலும் கடலூர், தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் பரவலாக நாளையும் மிதமான மழை நீடிக்கக்கூடும்.
தமிழ்நாட்டின் குறைந்தபட்ட வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என கணித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகரில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |