ஜேர்மன் நகரமொன்றில் கொட்டித்தீர்த்த மழை: தண்ணீரில் மிதக்கும் விமான நிலையம்
ஜேர்மன் நகரமொன்றில் கனமழை பெய்ததைத் தொடர்ந்து விமான நிலையத்தில் வெள்ளம் பெருகியுள்ளது. சுமார் 70 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஏராளம் பயணிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள்.
வெளியான வீடியோ காட்சி
ஜேர்மனியின் பிராங்பர்ட் நகரில் பெருமழை பெய்ததையடுத்து, அங்குள்ள விமான நிலையம் கடல்போல் காட்சியளிக்கிறது.
ஓடுபாதைகளில் எக்கச்சக்கமாக தண்ணீர் தேங்கி நிற்பதால், விமானங்கள் புறப்பட முடியாத நிலையும், விமானத்தில் வந்த பயணிகள் விமானத்திலிருந்து இறங்கமுடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
Had quite a few DM’s from people wondering why flights were diverting away from Frankfurt….here’s your answer ??
— Flight Emergency (@FlightEmergency) August 16, 2023
pic.twitter.com/05ZAoFO2WN
சமூக ஊடகம் ஒன்றில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், விமான நிலையத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதையும், விமானங்கள் வெள்ளத்துக்குள் நிற்பதையும் காணமுடிகிறது.
வெள்ளம் காரணமாக 70 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சுமார் 1,000 பயணிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |